என் மலர்

  நீங்கள் தேடியது "death woman"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி கவுசல்யா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கவுசல்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

  இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

  இந்நிலையில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாலாப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கருகினார்.
  லாலாப்பேட்டை:

  லாலாப்பேட்டை  அருகே உள்ள கொம்பாடிபட்டியை சேர்ந்தவர் அருள்சக்தி. இவரது மனைவி மைதிலி (வயது 37). இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். அருள்சக்தி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மைதிலியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

  இந்நிலையில் நேற்று இரவும் அருள்சக்தி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மைதிலி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மைதிலியை காப்பாற்றி முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் அலறினர்.

  இருவரதும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். சக்திவேல் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கணவர் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்துள்ளனர்.

  விருதுநகர்:

  விருதுநகர் சத்திரரெட்டியபட்டி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது53), தனியார் நிறுவன காவலாளி.

  இவரது மனைவி முத்துலட்சுமி (45). இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந்தேதியும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

  மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை கண்ட காளியப்பன் பயந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

  கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதற்கிடையில் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். முத்துலட்சுமி இறந்ததை தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் காளியப்பன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மானோஜிபட்டி அருகே உள்ள அய்யன் திருவள்ளுவர் நகரைச் சேரந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி முத்துமாரி (வயது 40). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

  இந்தநிலையில் நேற்று முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

  இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×