லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி

லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 32). நரிக்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேசுவரனுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ராஜேசுவரன் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com