என் மலர்

  நீங்கள் தேடியது "gang attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவையாறு:

  திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு நடுக்காவேரி மெயின்ரோட்டில் வரும்போது வெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு அதே ஊரை சேர்ந்தவர்கள் 2 கோஷ்டியாக மோதி கொண்டனர்.

  இது சம்மந்தமாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மகன் திலீபன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரை சேர்ந்த செந்தில், சிலம்பரசன், சுப்பிரமணியன், கிஷோர், கார்த்திகேயன், ஆகிய 5 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இதே போல் மொட்டையாண்டி மகன் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், புதியவன், திலீபன்ராஜ், ராஜபாண்டி, சூர்யா ஆகிய 5 பேர் மீதும் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போத்தனூரில் இன்று தொழில் அதிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை:

  கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(வயது 36).

  இவர் செட்டிப்பாளையம் ரோட்டில் அப்பகுதியில் ஒலிம்பிக் என்ற பெயரில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

  இன்று காலை இவரும், ஊழியர்கள் 4 பேரும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மதியம் 12.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்தனர்.

  நிறுவனத்தை சூறையாடிய அவர்கள் கண்காணிப்பு கேமிராக்களை அடித்து உடைத்தனர்.

  இதனால் ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு பரந்தாமன் அறைக்குள் இருந்து வெளியே வந்தார். அவரை அரிவாளால் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தபடி பரந்தாமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொலையாளிகள் தப்பிச் செல்லும் போது பிழைக்க வந்தால் பிழைப்பை மட்டும் பார்க்க வேண்டும், அதை மீறினால் இது தான் கதி என்று ஆவேசமாக சத்தம் போட்டு விட்டு சென்றுள்ளனர். பரந்தாமன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கும்பல் யார்? தொழில் ரீதியான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூரில் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #petrolbombing

  வேலூர்:

  வேலூரில் தோட்டப்பாளையத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தப்பிய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28) ஆகியோர் நேற்று முன்தினம் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

  இதையடுத்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுல் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல் தரப்பினர் அங்கு சென்றனர்.

  அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் பீர் பாட்டில், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர்.

  இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த ஒரு விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்துதுவம்சம் செய்தனர்.

  இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக பிரதாப், சசி, சின்னஅப்பு, ராஜி உள்பட 7 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  மேலும் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை விசாரிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கை வெவ்வேறு கோணங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதனிடையே தோட்டப்பாளையம் அருகே உள்ள காட்பாடி சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கினர்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

  அவரை சோதனை செய்தபோது அவரிடம் 1½ அடி நீளமுள்ள 2 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

  அவர் நாகர்கோவிலை சேர்ந்த செல்வம் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இந்த மோதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #petrolbombing

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbombing

  வேலூர்:

  வேலூர் பாபுராவ்தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28). இவர்கள் இருவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.

  இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

  இதற்கிடையே காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுடன் அப்பகுதிக்கு நடந்து சென்றனர்.

  தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவில் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்டோர் எதிரே வந்து மதுபாட்டில், பீர்பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை கோகுல் தரப்பினர் மீது வீசினர்.


  கோகுல் தரப்பினர் பதிலடியாக அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டையுடன் கோகுல் தரப்பினரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

  இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமானதும், தற்போது தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தனர்.

  விடுதி காவலாளி நுழைவு வாயில் இரும்பு கேட்டை பூட்டினார். பின்னர் அவர் டாக்டர்கள் அனைவரையும் அறைக்குள் செல்லும்படி கூறிவிட்டு விடுதியின் நுழைவு கதவிற்கும் பூட்டு போட்டார்.

  கோகுலை துரத்தி வந்த கும்பல் இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். பின்னர் கதவை திறக்கும்படி காவலாளியிடம் கூறினர். ஆனால் அவர் திறக்காததால் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளால் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அடித்து துவம்சம் செய்தனர்.

  விடுதி காவலாளி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் விடுதியை அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

  சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விடுதி காவலாளி, அங்கு தங்கியிருந்த டாக்டர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.

  தொடர்ந்து தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த கோகுல் உள்பட 4 பேரை போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

  ஜி.ஜி.ரவியின் மகன்களுடன் நாகர்கோவிலை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாவலராக வைத்திருப்பதாக ஜி.ஜி.ரவின் மகன்கள் கூறியுள்ளனர்.

  நாகர்கோவிலை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது தென் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தோட்டப்பாளையத்துக்குள் புகுந்துள்ளனர்.

  காரில் குண்டுகளை வீசி, விடுதியை சூறையாடியது ரவுடி குப்பனின் கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் தரப்பில் யாரையும் போலீசார் பிடிக்கவில்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

  முதலில் தாக்குதல் தொடங்கியது யார்? தோட்டப்பாளையத்தில் மது காலி பாட்டில்களுடன் கும்பல் தயாராக இருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

  இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #petrolbombing

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். திருட வந்த இடத்தில் மர்ம ஆசாமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவியும் இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பூசன் தனியாக வசித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். நேற்று காலை 10 மணிக்கு மேல் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் பூசன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது வாய் மற்றும் கால்களும் கட்டப்பட்டு இருந்தது.

  இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பூசன் வீட்டில் இருந்த மொபட், டி.வி. மற்றும் அவருடைய செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது வீட்டுக்கு திருட வந்த மர்ம ஆசாமிகள் அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை துணியால் கட்டி இருக்கலாம். பின்னர் ஆத்திரத்தில் பூசனை அடித்து கொலை செய்து விட்டு உடலை கட்டிப்போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூசனை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவரம் ஏரியில் ரவுடியை மர்ம கும்பல் வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செங்குன்றம்:

  வியாசர்பாடி, பி.வி. காலனி, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24) ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

  நேற்று மாலை திவாகர் நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று சோழவரம் ஏரியில் திவாகர், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திவாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  நேற்று மாலை வாலிபர்கள் சிலர் ஏரிக்கரையில் மது அருந்திவிட்டு காற்றாடி விட்டு கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.

  எனவே திவாகருடன் வந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த ஆண்டு வியாசர்பாடியில் நடந்த சீனிவாசன் என்பவரது கொலையில் திவாகர் சம்பந்தப்பட்டு இருந்தார்.

  எனவே அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

  இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏரிக்குள் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  புலிவலம்:

  திருச்சி மாவட்டம் புலிவலம் திண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனரோஜா ( 28). இவர்களுக்கு பிரதிக்ஷா (8) என்ற மகளும், கிஷோர் (6) என்ற மகனும் உள்ளனர். 
  கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வனரோஜா, குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். ராஜசேகர் திண்ணனூரில் தனியாக வசித்து வந்தார். 

  இந்த நிலையில் இன்று காலை திண்ணனூர் கரட்டாம் பட்டி கூச்சிக்காடு காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக புலிவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். 

  அப்போது அங்கு இறந்து கிடந்தது ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  சம்பவ இடத்திற்கு ஜம்பு நாதபுரம் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணனும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நெல்லை:

  பாளை அருகே உள்ள மேலபாட்டம் கிராமத்தை அடுத்த கொட்டாரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வினோத் (வயது30). மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் வாசுதேவன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி- மகனை பிரிந்து மும்பை சென்று விட்டார்.

  இதனால் வருமானம் இன்றி தவித்த வாசுதேவனின் மனைவியும் எங்கோ சென்று விட்டார். இதனால் வீடு இன்றி தவித்த வினோத் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். தினமும் இரவில் பஸ் நிலையத்தில் உள்ள ஏதாவது ஒரு கடையின் முன் படுத்து தூங்குவார்.

  நேற்று இரவு இவர் மது குடித்து விட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு வாசல் அருகே உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த மர்ம கும்பல், இரும்பு கம்பியால் அவரை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமானார்.

  இன்று காலை அந்த பகுதி வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது, அங்கு வினோத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

  உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றனர்? என்பது தெரியவில்லை.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் பொதுவாக பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் மிரட்டி பணத்தை அபகரித்து, மது குடிப்பதும், கஞ்சா அடிப்பதுமாக இருந்துள்ளார். அவர்களிடம் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பஸ் நிலையத்துக்கு வரும் அப்பாவி பயணிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

  இதனால் பஸ் நிலைய பகுதிகளில் வழக்கமாக படுத்து தூங்கும் பிச்சைக் காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் பிச்சைக்காரர்களிடம் பணத்தை அபகரித்து மது குடித்து வந்ததால், சில பிச்சைக்காரர்களே சேர்ந்து வினோத்தை கொலை செய்து இருக்கலாமா? அல்லது அவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் இன்று இறைச்சி கடை ஊழியர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் குடைபாறைப்பட்டியை சேர்ந்த மருதை மகன் குமரேசன் (வயது28). அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனிஷா என்ற மனைவியும், அக்‌ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

  இன்று வழக்கம்போல் கறிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆர்.வி. நகர் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.

  அவர்கள் வைத்திருந்த அரிவாளால் குமரேசனின் பின்னந்தலையில் பயங்கரமாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ×