களக்காடு அருகே வாலிபரை தாக்கிய கும்பல்

கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது.இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார்.
களக்காடு அருகே வாலிபரை தாக்கிய கும்பல்
Published on

களக்காடு:

கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, பாவநாசம் என்ற இசக்கிமுத்து மற்றும் 5 பேர் உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த கணபதிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைக்கண்னு உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com