நத்தம் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மர்மகும்பல்

கூலித்தொழிலாளியை மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி:

நத்தம் அருகே வலைய பட்டிைய சேர்ந்தவர் சின்னையா(45) . கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு தூங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அரிவாளால் சின்னையாவை சரமாரியாக வெட்டினர். இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் ஒன்றுகூடினர்.

இதை பார்த்ததும் அவரை வெட்டிய மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயங்களுடன் சின்னை யாவை மீட்ட அக்கம்பக்க த்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசா ரணையில் முன்விரோதம் காரணமாக சின்னையாவை அந்த கும்பல் தாக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com