என் மலர்
உள்ளூர் செய்திகள்

9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
- மதுரையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலவாசலை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் மணிமேகலை (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மணிமேகலை கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். அதற்கு காரணம் தெரியாததால் எதற்காக இப்படி இருக்கிறார்? என்று அவரது பெற்றோர்கள் கேட்டனர்.
இருந்த போதிலும் அவர் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிமேகலை இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது மர்மமாக உள்ளது.
அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் இந்த முடிவு எடுத்தாரா? என்பது தெரியவில்லை. இது பற்றி மாணவியின் பெற்றோர் திடீர் நகர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.






