என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னை மன்னித்துவிடுங்கள் நீட் தேர்வு அச்சத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2  தற்கொலைகள்
    X

    "என்னை மன்னித்துவிடுங்கள்" நீட் தேர்வு அச்சத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 தற்கொலைகள்

    • "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
    • போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நீட் நுழைவுத் தேர்வுக்காகப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், சில மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (புதன்கிழமை) கவாஹிஷ் தேவ்ராம் நாகரே (16) என்ற மத்தியப் பிரதேச மாணவர், நாக்பூரில் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    இதேபோல், 17 வயது வைதேகி அனில் உய்கே என்ற மாணவியும் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர் மரணங்கள், போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    Next Story
    ×