search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry store"

    டிப்-டாப் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கடலூர்:

    பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.

    அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தஞ்சையில் தனியார் நகைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்
    • நகை கடை உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை நகரில் மையப்பகுதியில் தனியார் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வெளியிடப்பட்ட பல்வேறு சலுகைகள் கொண்ட அறிவிப்பை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகைகள் அடகு வைத்தும், சீட்டில் பணம் கட்டியும் வந்தனர்.

    ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த நகை கடை மூடப்பட்டது.

    அதன் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த நகைக்கடை முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். கடை உரிமையாளரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நீங்கள் புகார் மனுவாக கொடுங்கள் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் நியானசந்த் ஜெயின். இவர் பலமநேர் லிங்காயத் ரோட்டில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய பேரன் பிரதீப் ஜெயின் (21). இவர் பலமநேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தாவின் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கோவா, கேரளா சுற்றுலா செல்ல வேண்டும் என தன்னுடைய தாத்தாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் நகைகளை திருட திட்டம் தீட்டினார். நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு நியானசந்த் சென்றார்.

    இதை நோட்டமிட்டட பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கடையை திறந்து பீரோவில் இருந்த 1 கிலோ 240 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடையை திறந்து பார்த்தபோது பீரோவில் இறந்த நகைகள் மாயமானதை கண்ட நியானசந்த் ஜெயின் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஈதுருபாஷா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

    அதன்பின் பிரதீப் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது பலமநேர் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பஸ் நிலையத்தில் இருந்த பிரதீப்பை பிடித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் நகைகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் இருந்த புரந்தர் ரெட்டி (21), பிரதிவ்ராஜ் (20) உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள கல்யாண் (20), குணசேகர் (20), யஸ்வந்த் (20) ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகைகளை திருடி வெளியே விற்று சுற்றுலா செல்ல இருந்ததாக தெரிவித்தனர். #tamilnews
    திருவொற்றியூர் நகை கடையில் 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரில் பந்தாராம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி வந்த மர்ம ஆசாமி கடை உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்றான்.

    அவன் வந்த மோட்டார் சைக்கிள் கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் இருந்த ஆவணங்களை வைத்து கொள்ளையன் சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 40) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் பதுங்கி இருந்த சந்துருவை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×