தஞ்சையில் தனியார் நகைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தஞ்சையில் தனியார் நகைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர் நகை கடை உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார்.
தனியார் நகைக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் நகைக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூா்:

தஞ்சை நகரில் மையப்பகுதியில் தனியார் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வெளியிடப்பட்ட பல்வேறு சலுகைகள் கொண்ட அறிவிப்பை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகைகள் அடகு வைத்தும், சீட்டில் பணம் கட்டியும் வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த நகை கடை மூடப்பட்டது.

அதன் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதியம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த நகைக்கடை முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். கடை உரிமையாளரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீங்கள் புகார் மனுவாக கொடுங்கள் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com