என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ஜெர்சி"
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
- இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர்.
இந்நிலையில் நாளை நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியின் போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஜெர்சி போல பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
- இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.
இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டி எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் முக்கியமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் டீம் இந்தியாவின் டைட்டில் ஜெர்சி ஸ்பான்சராக ஆர்வம் காட்டியுள்ளன.
- உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார். மேலும் அவர் மருத்துவமனையில் கிரிக்கெட்டும் விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.






