என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Team India Jersey"

    • 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. டி20 வடிவத்தில் இந்த தொடர் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் டி20 வடிவில் நடைபெற்றுள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது.


    இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். ஆசியக் கோப்பை தொடர் நாளை துபாயில் தொடங்க உள்ள நிலையில், ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்த தொடரில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெர்சி ஹெலிகாப்டரில் தொங்க விட்டு தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் வருவது போல வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    இதனை பார்த்த ரசிகர்கள் இந்திய ஜெர்சியிலேயும் காவியை கொண்டு வந்து விட்டீர்களா என ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியை காவி நிறமாக மாற்றினர். பின்னர் இந்திய ஜெர்சியை மாற்றி விட்டார்கள் எனவும் எதற்கு கொஞ்சம் கொஞ்சமாக காவியாக மாற்ற வேண்டும் முழுவதுமாக மாற்ற வேண்டியது தானே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார். மேலும் அவர் மருத்துவமனையில் கிரிக்கெட்டும் விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

    ×