என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 5,000 ரன்: ரசல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா
    X

    டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 5,000 ரன்: ரசல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா

    • நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    நாக்பூர்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.

    அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் மற்றும் உள்ளூர் போட்டி சேர்த்து) இதுவரை 169 ஆட்டங்களில் ஆடி 5,002 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

    இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரஸலிடம் இருந்து (2,942 பந்தில்) தட்டிப் பறித்தார்.

    Next Story
    ×