என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் விராட் கோலி
- விராட் கோலியின் 54-வது ஒருநாள் சதம் இதுவாகும்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.






