என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான் கேம்பல்"

    • ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
    • முதல் சதம் அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் கேம்பல் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார்.

    இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தார்.

    மேலும் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிரெவோர் கொடாட் உள்ளார். இவர் முதல் சதத்தை பதிவு செய்ய 58 இன்னிங்ஸ்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×