என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் அணிந்த தொப்பி ரூ. 4.2 கோடிக்கு ஏலம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
    X

    கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் அணிந்த 'தொப்பி' ரூ. 4.2 கோடிக்கு ஏலம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.
    • கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், இந்தத் தொப்பி 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 கோடி) விற்பனையானது.

    இந்தத் Baggy Green தொப்பிக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. 1947-48இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.

    பின்னர் இதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்க வாசுதேவ் சோஹோனிக்கு பிராட்மேன் பரிசாக வழங்கினார்.

    சோஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    தொப்பியின் உட்புறத்தில் பிராட்மேன் மற்றும் சோஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    70 ஆண்டுகளைக் கடந்து தற்போது இந்த தொப்பி சாதனை விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

    Next Story
    ×