என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெல்லி பனிமூட்டத்தில் விளையாடிய Cricket Lovers- வைரல் வீடியோ
- டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
- இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அங்கு ஒரு கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சாளர் முகம் கூட சரியாக தெரியாத நிலையில் பந்தை வீச அதை பேட்டர் விளாசுகிறார். அதில் கீப்பர் மற்றும் பேட்டர் மட்டுமே தெளிவாக தெரிகிறார்கள். மற்றபடி மறுமுனையில் உள்ள பேட்டர் , பந்து வீச்சாளர், நடுவர் ஆகியோர் ஓர் அளவு தெரிந்த நிலையில் சுற்றி யார் எங்கே உள்ளார்கள் என்பதே தெரியவில்லை.
இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் காதலுக்கு கண்ணில்லை என்றால் பரவாயில்லை கிரிக்கெட் விளையாட கண் வேண்டுமே. அதில் பந்து வருவது கூட சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள்தான் உண்மையான கிரிக்கெட் லவ்வர்ஸ் எனவும் மற்றும் சிலர் என்னதான் பனி மூட்டத்தில் கிரிக்கெட்டில் விளையாடினாலும் பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






