என் மலர்
நீங்கள் தேடியது "ODI Tri-Series"
- பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
- பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அப்போது பாபர் அசாம் பேட்டிங் ஆட களமிறங்கினார். அவருக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீசினார். அவர் வீசிய பந்தில் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீம காலமாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருவது பாகிஸ்தான் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர்.
- தென் ஆப்பிரிக்காவில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர். இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றனர். இந்த ஆட்டத்திற்குப் பிறகு அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் தென் ஆப்பிரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி:-
டெம்பா பாவுமா, ஜெரால்ட் கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்டர், மிஹ்லாலி மபோங்வானா*, செனுரன் முத்துசாமி*, கிடியோன் பீட்டர்ஸ்*, மீகா-ஈல் பிரின்ஸ்*, ஈதன் போஷ்*, மேத்யூ ப்ரீட்ஸ்கே*, ஜேசன் ஸ்மித், மற்றும் கைல் வெர்ரைன்.
- தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றனர்.
- முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
லாகூர்:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் லாகூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது தென் ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் பயிற்சியாளரான வாண்டில் குவாவு மாற்று பீல்டராக களமிறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடர் நடைபெற்றதால் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே இந்த ஆட்டத்தில் பீல்டிங் பயிற்சியாளரே மாற்று பீல்டராக களத்திற்குள் வந்துள்ளார்.
- முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர்.
- இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் களமிறங்கினர்.
ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகீல் 8 ரன்னில் வெளியேறினார். பேட்டிங்கில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் 29 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
குறைந்த போட்டியில் விளையாடி 6000 ரன்கள் கடந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்த பட்டியலில் பாபர் அசாம், ஹசிம் அம்லா 123 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி (136 போட்டிகள்), கனே வில்லியம்சன் (139 போட்டிகள்), டேவிட் வார்னர் (139 போட்டிகள்), ஷிகர் தவான் (140 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுத் சஹீல் 8 ரன்னிலும் பாபர் அசாம் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ரிஸ்வான் - சல்மான் ஆகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தையப் தாஹிர் 38, ஃபஹீம் அஷ்ரஃப் 22, நசீம் ஷா 19 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.







