search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய கோப்பைக்கு ரெடி.. நெட்ஸ்-இல் பட்டையை கிளப்பிய கே.எல். ராகுல்!
    X

    ஆசிய கோப்பைக்கு ரெடி.. நெட்ஸ்-இல் பட்டையை கிளப்பிய கே.எல். ராகுல்!

    • ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
    • கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

    கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.

    அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.

    வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும்.

    Next Story
    ×