search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்? அடுத்த மாதம் இறுதி முடிவு
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்? அடுத்த மாதம் இறுதி முடிவு

    • ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
    • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.

    பஹ்ரைன்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.

    இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×