என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "egg exports"

    • துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது.
    • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் செந்தில் கூறுகையில், நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், ஓமன், பஹ்ரைன், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. தற்போது ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 10 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது ஏற்றுமதி ஆகி வருகிறது என்றார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 2 கோடியே 59 லட்சமாக அதிகரித்து உள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3¼ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் கேரளாவுக்கு 90 லட்சம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம், வெளிநாடுகளுக்கு 40 லட்சம் என அனுப்பப்பட்டு வந்தன. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    தற்போதும் இதே நடைமுறை நீடித்தாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தினசரி முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வந்தது. தற்போது இது சற்று உயர்ந்து உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 கோடியே 45 லட்சம் முட்டைகளும், கடந்த ஜனவரி மாதம் 2 கோடியே 55 லட்சம் முட்டைகளும் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இது கடந்த மாதம் (பிப்ரவரி) 2 கோடியே 59 லட்சமாக உயர்ந்தது. அதாவது ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது கடந்த மாதம் 4 லட்சம் முட்டைகள் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ×