என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அபுதாபி டி10 லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது பொல்லார்ட் தலைமையிலான UAE புல்ஸ் அணி
- UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அபுதாபி டி 10 லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் மற்றும் பொல்லார்ட் தலைமையிலான UAE புல்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
30 பந்துகளில் 98 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Next Story






