என் மலர்
நீங்கள் தேடியது "Yeman Saudi Coalition"
- பிரிவினைவாதிகளுக்கு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
- துறைமுகம் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. வடக்குப் பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தெற்குப் பகுதியை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்த அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதாக கூறி, சவுதி கூட்டுப்படைகள் கப்பல் மீது வான் தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலும் முழுமையான விவரங்களை குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்படவில்லை.
அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஹொடைடா நகரின் அருகே முகாமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல், செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஹவுத்தி போராளிகளின் பிடியில் இருந்து விமான நிலையம் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஏமன் ராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது மூன்று ஆண்டுகால உள்நாட்டுப் போரில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல்வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் அந்த துறைமுகத்தை கைப்பற்ற அடுத்தகட்ட தாக்குதலை ஏமன் அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #YemenWar #YemanSaudiCoalition #HodeidahAirport






