என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
    X

    உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

    • ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சில நாட்களுக்கு முன்பு டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

    உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கனவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த ரஷியா மறுத்து வருவதால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய எண்ணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து உள்ளது.

    ரோஸ்நெப்ட் , லுகோயில் ஆகிய 2 நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் துணை நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இவை மிகப்பெரிய தடைகள். ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "போர் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    மேலும் அமெரிக்க கருவூல துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறும்போது,"இந்த அர்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் புதின் மறுத்துவிட்டதால், ரஷியாவின் போர் எந்தி ரத்திற்கு நிதியளிக்கும் அந்நாட்டின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போல் புதின் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றார்.

    Next Story
    ×