என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போர் விவகாரம்: டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைப்பு
    X

    உக்ரைன் போர் விவகாரம்: டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைப்பு

    • டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று இரு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புடா பெஸ்ட் நகரில் நடைபெற விருந்த டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு தற்போது நடைபெறாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×