என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் மீது ஒரு வாரத்துக்கு தாக்குதலை நிறுத்த ரஷியா சம்மதம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
    X

    உக்ரைன் மீது ஒரு வாரத்துக்கு தாக்குதலை நிறுத்த ரஷியா சம்மதம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

    • அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.
    • இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    உக்ரைனில் கடுமையான உறைபனி நிலவும் நிலையில், தலைநகர் கீவ்மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வாரத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷிய அதிபர் புதினிடம் கேட்டு கொண்டேன். இந்த அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.

    இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார். இது சிறப்பான முடிவு. இதை உக்ரைன் தரப்பில் முதலில் நம்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் மோசமான சூழலில் போராடி வருவதால் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்றார். ஆனால் இது தொடர்பாக ரஷியாவிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×