என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய அதிபர் புதின் இல்லத்தை குறிவைத்து தாக்குதல் - பிரதமர் மோடி கவலை
    X

    "ரஷிய அதிபர் புதின் இல்லத்தை குறிவைத்து தாக்குதல்" - பிரதமர் மோடி கவலை

    • அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.

    ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

    போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×