என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி சிவா"

    • அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
    • ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

    கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.

    பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.

    ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

    சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். 

    • இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.

    சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

    ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்

    • தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும்
    • நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தேவனூர்புதூரில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று பேசியதாவது:-

    "மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 17 லட்சம் மகளிருக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. சிப்பாய்கள் களப்பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் நமக்கு எதிராக போட்டியிடுபவர்கள் வல்லவர்களா, என்றால் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சிக்காரர்கள். மரபுகளை மீறி வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.

    வரும் தேர்தலில் தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம். உற்பத்தியை பெருக்குகிறோம். வேலைவாய்ப்பை பெருக்குகிறோம். மத்திய அரசு இதை செய்தால்தான் உங்களுக்கு காசு தருவேன் என்றால் அதனை நீங்களே வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு தேவையில்லை. கல்விக்கு தர வேண்டிய பணத்தை தருவதில்லை.

    100 நாள் வேலை திட்டத்துக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. கேட்டால் இந்தி படி என்கிறார்கள். நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல. ஆனால் அதை படி என நிர்பந்தித்தால் முடியாது என்போம். வட நாட்டு தலைவர்களை தமிழ்நாட்டில் மதிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு தலைவர்களை வடநாட்டில் கண்டுகொள்வதில்லை. இதை நாடாளுமன்றத்தில் பேசினேன். நாங்கள் தோற்க மாட்டோம். எதிரிகளையும் வெற்றிபெற விடமாட்டோம்." இவ்வாறு அவர் பேசினார். 

    ×