என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varun Aaron"

    • இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன், சஞ்சய் பங்கர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன் மற்றும் சஞ்சய் பங்கர் உரையாடி கொண்டிருந்தனர். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்த போது பவுலர் வாஷிங்டன் சுந்தரிடம் கீப்பர் கே.எல்.ராகுல் தமிழில் உரையாடலாமே என வருண் ஆரோன் கூறினார்.

    அதற்கு மற்றொரு வர்ணனையாளரான சஞ்சய் பங்கர், தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நமது தேசிய மொழி என கருத்தை தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

    • நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும்.
    • இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சராசரியாக 145 வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இவர் இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக, நான் வேகமாகப் பந்து வீசுவதில்தான் வாழ்ந்திருக்கிறேன், சுவாசித்திருக்கிறேன், செழித்திருக்கிறேன். இன்று, மிகுந்த நன்றியுடன், பிரதிநிதித்துவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

    மேலும் பிசிசிஐ மற்றும் மாநில அணியான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி.

    ஆரோன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பங்கை வகித்ததற்காக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.

    வேகப்பந்து வீச்சுதான் எனது முதல் காதல். நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும்.

    என்று ஆரோன் கூறினார்.

    அதிவேகமாக பந்து வீசும் திறன் படைத்த வருண் ஆரோன் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஜார்கண்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். 2011-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். அசுர வேகத்தில் பந்து வீசும் வருண் ஆரோன், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் 2015-ம் ஆண்டும், இலங்கைக்கு எதிராக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.

    சுமார் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் வருண் ஆரோன் தற்போது கவுன்ட்டி போட்டியில் லெய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். சிறப்பாக பந்து வீசி வரும் வருண் ஆரோன் கிளேமோர்கன் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 65 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.



    கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக பந்து வீசும் என்னால், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வருண் ஆரோன் கூறுகையில் ‘‘மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கவுன்டி போட்டியிலும் என்றால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    என்னால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்று தேர்வாளர்கள் விரும்பினால், என்னால் இந்த அணிக்காக விளையாட முடியும். என்னால் அதிவேகத்திலும் என்னுடைய சிறந்த பந்து வீச்சையும் வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.
    ×