என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் பங்கர்"

    • இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன், சஞ்சய் பங்கர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன் மற்றும் சஞ்சய் பங்கர் உரையாடி கொண்டிருந்தனர். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்த போது பவுலர் வாஷிங்டன் சுந்தரிடம் கீப்பர் கே.எல்.ராகுல் தமிழில் உரையாடலாமே என வருண் ஆரோன் கூறினார்.

    அதற்கு மற்றொரு வர்ணனையாளரான சஞ்சய் பங்கர், தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நமது தேசிய மொழி என கருத்தை தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

    • இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர்.
    • பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர். இவர் முன்னதாக ஆர்யன் என்று அழைக்கப்பட்டார். இவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார். 2023-ல், பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக்கொண்டார். 23 வயதான அவர், இடது கை பேட்டர் ஆவார் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். 

    இப்போது அனயா, மான்செஸ்டரில் வசிப்பதாகவும், கிரிக்கெட் விளையாடுவதாகவும், மேலும் பல சமூக ஊடகங்களில் தனது பயணத்தைப் பற்றிய வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் எனது பாலின மாற்றத்திற்குப் பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினார்கள் என அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர். அவர்களுடைய மோசமான பக்கங்களில் நான் இடம்பெற விரும்பவில்லை. அதனால் நான் அந்த முழு சூழ்நிலையையும் தவிர்த்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னை ஆதரித்த சிலர் காலப்போக்கில் தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டனர்.

    என அனன்யா கூறினார்.

    ×