என் மலர்tooltip icon

    இந்தியா

    சண்டிகரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்
    X

    சண்டிகரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்

    • வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

    சண்டிகரில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    Next Story
    ×