என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விநாயகர் ஊர்வலம்- தென்காசி பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு
- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தென்காசி அருகே கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க அம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.






