என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rural employment scheme"

    • ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.
    • மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது.

    இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது.

    கிராமப்புற பொருளாதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்க முடியும்.

    ஆனால்,இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 9.27 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை கோரி தமிழ்நாட்டில் 85.70 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன.

    அவர்களில் 74.95 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. எனினும், அவர்களில் 30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 20.61 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாள்கள் வேலை வழங்கப்படும் மாறாக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள மனித நாள்களுக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்கள் குறைக்கும்படி ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு திமுக அரசு ஆணையிட்டுள்ளது.

    அதனால் தான் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 35 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 9 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.

    அதையாவது திமுக அரசு வழங்குமா? அல்லது 12 கோடி நாள்களைத் தாண்டக் கூடாது என்ற எண்ணத்தில் இனிவரும் நாள்களில் வேலைவாய்ப்பைக் குறைத்து விடுமா? என்பது தெரியவில்லை.

    வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 2023-24ஆம் ஆண்டில் ரூ.12,136 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.7587 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கியது. ஆனால், நடப்பாண்டில் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரூ.5053 கோடியை மட்டும் தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டிற்கும் முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவு ஆகும்.

    ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. மனிதத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் ஆகும். கடந்த காலங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கூடுதல் தொகைக்கு வேலை வழங்கி விட்டு, அதை மத்திய அரசிடமிருந்து பெற்ற வரலாறு உள்ளது. அதே நிலையை இப்போது எடுக்காவிட்டால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய தொகையில் ரூ.10,000 கோடி வரை இழக்க வேண்டியிருக்கும். மாநில அரசின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் திமுக இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன்?

    நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார்.
    • ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மணியாச்சி அருகே உள்ள கீழப்பூவாணி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களிடம் 100 நாள் வேலையும், அதற்கான ஊதியமும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    இதுபோல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் நடக்கும் 100 நாள் திட்ட பணிகளையும் பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தையும் பார்வை யிட்டார். அப்போது கருங்கு ளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, பொறியாளர் சித்திரை சேகர், ஓவர்சியர் சீனிவாசன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×