search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடத்தில், ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரச்சார இயக்கம்
    X

    ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் பேசினார்.

    கொள்ளிடத்தில், ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரச்சார இயக்கம்

    • 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
    • இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

    இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

    தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    Next Story
    ×