search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் - விழாவில் கலெக்டர் பேச்சு
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் சாருஸ்ரீ பேசிய காட்சி.

    கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் - விழாவில் கலெக்டர் பேச்சு

    • மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
    • பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

    இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.

    கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.

    இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×