search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalidaikurichi"

    • கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    கல்லிடைக்குறிச்சி :

    கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்று பேசினார்.

    பள்ளிச்செயலர் சங்கர், ரோட்டரி சங்க தலைவர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அம்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினர் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர்.
    • நிதி நிறுவன ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்து உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (வயது 42). இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி மீனா. இவர்களுக்கு 1 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    அம்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினர் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர். பின்னர் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிட்டனர். அதே நிறுவனத்தில் மீண்டும் ரூ.50 ஆயிரம் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த மாத தவனையை செலுத்தமால், சிறிது கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்து உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த நவநீதகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
    • சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்திலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் குப்பைகள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்ததால் பள்ளியை சுற்றி விஷப்பூச்சிகள் அடிக்கடி வந்து குழந்தைகளுக்கு இடையூறாக இருந்ததுடன் அச்சுறுத்தலாகவும் இருந்தது.

    இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-ம் அணி தளவாய் கார்த்திகேயனிடம் கேட்டு கொண்டதின் பேரில், 12-ம் அணி, 9-ம் அணியை சேர்ந்த சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பட்டாலியன் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் 12-ம் அணி தளவாய் கார்த்திகேயன், உதவி தளவாய் மனோகரன், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சிறப்பு காவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிர மசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விக்கிரமசிங்கபுரம், காரையார்,சேர்வலார், பாபநாசம்,வீகேபுரம், சிவந்தி புரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விளைபட்டி, முதலியார் பட்டி மற்றும் ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏபி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல் புதூர், ஆம்பூர்,பாப்பான் குளம், சம்மன் குளம், செல்லபிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×