search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government School Campus"

    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
    • சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்திலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் குப்பைகள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்ததால் பள்ளியை சுற்றி விஷப்பூச்சிகள் அடிக்கடி வந்து குழந்தைகளுக்கு இடையூறாக இருந்ததுடன் அச்சுறுத்தலாகவும் இருந்தது.

    இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-ம் அணி தளவாய் கார்த்திகேயனிடம் கேட்டு கொண்டதின் பேரில், 12-ம் அணி, 9-ம் அணியை சேர்ந்த சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பட்டாலியன் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் 12-ம் அணி தளவாய் கார்த்திகேயன், உதவி தளவாய் மனோகரன், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சிறப்பு காவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×