கல்லிடைக்குறிச்சி திலகர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி  நடந்த போது எடுத்த படம்
 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்
Published on

கல்லிடைக்குறிச்சி :

கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்று பேசினார்.

பள்ளிச்செயலர் சங்கர், ரோட்டரி சங்க தலைவர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com