போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் நடந்தது.இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையம் சார்பில் அனைத்து இளங்கலை, இளநிலை மற்றும் முதுகலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் திறன் வெளிப்பாட்டின் அவசியத்தை மாணவர்க ளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரை யாளராக சிவகாசி அப்தான் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசுகையில், நிகழ்காலச் சூழலில் அரசு வேலைகளைப் பெறும் முறைகள் குறித்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

கல்லூரி பணி அமர்வு மைய பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். குமாரபாலாஜி நன்றி கூறினார். இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com