search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilanji"

    • லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார்.
    • மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து ஹலோவீன் தினத்தை கொண்டாடினர்

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி ஹரிணி இறைவணக்கம் பாடினார். முத்து ஜனனி வரவேற்றார். நிவேதிகா நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார்.

    லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார். மணிஷா பூசணிக்காயின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து அனைவரையும் அச்சமூட்டும் வண்ணம் நடித்து ஹலோவீன் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைமூன் உறுதிமொழி எடுத்தார்.

    மகாலட்சுமி நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்தமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஹாலோவீன் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றோரை பாராட்டினர்.


    • நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலிம்பியாட் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. மனித உடலின் பாகங்கள், அரசு ஆவண தொகுப்பு, ஆரோக்கிய உணவுகள் , அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை விண்வெளித் தொழில் நுட்பம், விலங்குகள், பறவைகள், தாவரங்களின் வாழ்க்கை, நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    இதில் திரிசன்னா குழுவினர் 35 புள்ளிகள் பெற்று முதலிடமும், தமிழ் மதி குழுவினர் 25 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும், பாவனா குழுவினர் 20 புள்ளிகள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். ஒலிம்பியாட் வினாடி- வினாவில் வெற்றி பெற்றவர்களை பாரத் கல்விக்குழுத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    • இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.
    • 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பாரத் வித்யா மந்திர் முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

    ரஜிகா ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். காலையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் சமாதானப் புறாவைப் பறக்கவிட்டு தேசியக் கொடி மற்றும் பள்ளிக் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். மாணவர் ராகுல் ஓலிம்பிக் தீபமேற்றினார்.

    தேசிய விளையாட்டு தினப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.


    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினர்.


    • இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
    • மழலையர் பிரிவு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து அணிவகுத்து வந்தனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. துணைமுதல்வர் பாலசுந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். மாணவி நிவேதிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார். ஜெசிந்தா விநாயகர் சதுர்த்தி பற்றிய கதையைக் கூறினார். மழலையர் பிரிவு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து அணிவகுத்து வந்தனர். பால ஷேஷன், திரிஷானா ஹரிணி ஆகியோர் விநாயகர் சுலோகப்பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுபாமா உறுதிமொழி எடுத்தார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வில் பங்கேற்றோரைப் பாராட்டினர்.

    • சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.
    • சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.

    அனுபாமா, தானிஸ் இறைவணக்கம் பாடினர். அதில் ரக்‌ஷா பந்தனுக்குப் பொருள் விளக்கம் கூறினார். முகுந்தன், ஆராதனா குழுவினர் ரக்‌ஷா பந்தன் பற்றி விளக்கினர்.ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மிருதுளா ஐனனி உறுதிமொழி எடுத்தார்.

    பாரத் கல்விக் குழுமத்தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

    • துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி பாரத் பள்ளியில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழும சிறப்பு அதிகாரி அரவிந்த் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூர்வஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ரக்சனா வரவேற்றார். மனிதநேயம் குறித்து தனீஸ் குழுவினர் யோகா மூலம் விளக்கினர். நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    ஆசிரியை லாவண்யா, தேவி ஆகியோர் சமஸ்கிருத யோகா பாடலுக்கு ஆங்கிலத்தில் விளக்கமளித்தனர். அறிவியல் ஆசிரியை சுமதி, கணித ஆசிரியை முத்துக்குமாரி உள்ளிட்டோர் யோகாசனம் பற்றிப் பேசினர். பாரத் கல்விக் குழும அதிகாரி அரவிந்த் குமாா் சிறப்புரையாற்றினார்.

    ஆகிலா யோகா தின உறுமொழி எடுத்தார். ஆமினா நன்றி கூறினார்.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    ×