

தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. துணைமுதல்வர் பாலசுந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். மாணவி நிவேதிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார். ஜெசிந்தா விநாயகர் சதுர்த்தி பற்றிய கதையைக் கூறினார். மழலையர் பிரிவு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து அணிவகுத்து வந்தனர். பால ஷேஷன், திரிஷானா ஹரிணி ஆகியோர் விநாயகர் சுலோகப்பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுபாமா உறுதிமொழி எடுத்தார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வில் பங்கேற்றோரைப் பாராட்டினர்.