search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி  பாரத் கல்விக் குழுமத்தில் தேசிய விளையாட்டு தினவிழா
    X

    விழாவில் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் சமாதானப் புறாவைப் பறக்கவிட்ட போது எடுத்த படம்.


    இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் தேசிய விளையாட்டு தினவிழா

    • இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.
    • 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பாரத் வித்யா மந்திர் முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

    ரஜிகா ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். காலையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் சமாதானப் புறாவைப் பறக்கவிட்டு தேசியக் கொடி மற்றும் பள்ளிக் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். மாணவர் ராகுல் ஓலிம்பிக் தீபமேற்றினார்.

    தேசிய விளையாட்டு தினப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.


    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினர்.


    Next Story
    ×