search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports day"

    • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநலம் சார்ந்த தேவைகளும் அதிகரித்து உள்ளன.
    • கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் பட்டறைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி வருகின்றது.

    சென்னன பெரம்பூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பந்தர் கார்டனில் ஊக்கம் அறக்கட்டளையின் மூலம் கடந்த 7ம் தேதி அன்று மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கால் பந்து, கோ கோ, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக செல்வகுமார், ஓவியர் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்களான மோகன் முனுசாமி, சதீஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

    மாணவர்களின் மனநலம் மற்றும் அவர்களின் நடத்தையை கொரோனாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என பிரித்து விடலாம். கடந்த சில ஆண்டுகளாக அனனவரின் கைக்குள்ளும் உலகம் வந்துவிட்டது. ஆதலால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்துவிட்டது.

    இதன் வெளிப்பாடாக பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு போதுமான ஆரோக்கியத்துடன் இல்லை.

    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநலம் சார்ந்த தேவைகளும் அதிகரித்து உள்ளன. ஊக்கம் அறக்கட்டளை உடல்நலம் போல் மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி மிக முக்கியம் எனக் கருதி கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் பட்டறைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக பந்தர் கார்டனின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் உதவியோடு ஊக்கம் அறக்கட்டளை விளையாட்டு மூலம் மாணவர்களின் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்டுத்துதல், அவர்களின் திறமைகளை கண்டு ஊக்கம் கொடுத்தல், குழுவாக ஒற்றுமையாக விளையாடுதல், ஓவியம், கவிதை, கட்டுரை மூலம் எண்ணங்கடளயும் உணர்வுகளையும் வெளிப்படுத்துதல், இவ்வளவு நாளாக அங்கீகாரம் கிடைக்காதா என ஏங்கி கொண்டிருந்த மாணவர்களின் திறமையை அங்கீகரித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி ஊக்குவித்தல் போன்ற மனநலம் சார்ந்த விஷயங்களை விளையாட்டின் மூலம் சிறப்பாக நடத்தினர்.

    • பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி யின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் கலந்து கொண்டார்.

    இவ்விழா பள்ளியின் இயக்குனர் டாக்டர்.மரகதவல்லி மற்றும் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூர்ணன் முன்னி லையில் நடை பெற்றது.

    சிறப்பு விருந்தினர் தம் உரையில் மாணவர்கள் குழு விளையாட்டுகள் அல்லது தனி விளையாட்டுகள் மூல மாக தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பர்மேஷன், இண்டர்செக்ஷன், சர்கிள்ஸ் ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் கணிதத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

    புஷ்பலதா பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர். பின்னர் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் காட்வின்.எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.
    • 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தயான் சந்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய தேசிய விளையாட்டு தினவிழா நடைபெற்றது.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பாரத் வித்யா மந்திர் முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

    ரஜிகா ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். காலையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் சமாதானப் புறாவைப் பறக்கவிட்டு தேசியக் கொடி மற்றும் பள்ளிக் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். மாணவர் ராகுல் ஓலிம்பிக் தீபமேற்றினார்.

    தேசிய விளையாட்டு தினப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். 100மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் பந்து வீசுதல், கூடைப் பந்து போட்டிகளும் நடைபெற்றன.


    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு நீட் தேர்வில் தமிழக இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் மற்றும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்லா, ஜே.இ.இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வேணுஅரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினர்.


    • நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஏற்றி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டு விழா

    பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும் நவீன ஆய்வகம் மூலம் அறிவித்திறன் பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி ஆண்டு விழா எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்காட் கல்லூரி கல்வி குழும நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் பிரியதர்ஷினி, அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    கலை நிகழ்ச்சி

    விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டிக்கான கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாணவ-மாணவிகளின் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பரிசு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி பாராட்டினார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி துணை கமிஷனர் தலைமை யில் மாணவர்களும், பெற்றோர்களும் எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் பொது மேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் பத்மினி வள்ளி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×