search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு மூலம் மனநலம்- போட்டிகளில் வென்று பரிசுகளை குவித்த அரசு பள்ளி மாணவர்கள்
    X

    விளையாட்டு மூலம் மனநலம்- போட்டிகளில் வென்று பரிசுகளை குவித்த அரசு பள்ளி மாணவர்கள்

    • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநலம் சார்ந்த தேவைகளும் அதிகரித்து உள்ளன.
    • கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் பட்டறைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி வருகின்றது.

    சென்னன பெரம்பூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பந்தர் கார்டனில் ஊக்கம் அறக்கட்டளையின் மூலம் கடந்த 7ம் தேதி அன்று மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கால் பந்து, கோ கோ, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக செல்வகுமார், ஓவியர் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்களான மோகன் முனுசாமி, சதீஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

    மாணவர்களின் மனநலம் மற்றும் அவர்களின் நடத்தையை கொரோனாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என பிரித்து விடலாம். கடந்த சில ஆண்டுகளாக அனனவரின் கைக்குள்ளும் உலகம் வந்துவிட்டது. ஆதலால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்துவிட்டது.

    இதன் வெளிப்பாடாக பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு போதுமான ஆரோக்கியத்துடன் இல்லை.

    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனநலம் சார்ந்த தேவைகளும் அதிகரித்து உள்ளன. ஊக்கம் அறக்கட்டளை உடல்நலம் போல் மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி மிக முக்கியம் எனக் கருதி கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் மற்றும் வாழ்க்கைக்கல்வி சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் பட்டறைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக பந்தர் கார்டனின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் உதவியோடு ஊக்கம் அறக்கட்டளை விளையாட்டு மூலம் மாணவர்களின் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்டுத்துதல், அவர்களின் திறமைகளை கண்டு ஊக்கம் கொடுத்தல், குழுவாக ஒற்றுமையாக விளையாடுதல், ஓவியம், கவிதை, கட்டுரை மூலம் எண்ணங்கடளயும் உணர்வுகளையும் வெளிப்படுத்துதல், இவ்வளவு நாளாக அங்கீகாரம் கிடைக்காதா என ஏங்கி கொண்டிருந்த மாணவர்களின் திறமையை அங்கீகரித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி ஊக்குவித்தல் போன்ற மனநலம் சார்ந்த விஷயங்களை விளையாட்டின் மூலம் சிறப்பாக நடத்தினர்.

    Next Story
    ×