search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga Day"

    • 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.
    • மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    புதுச்சேரி:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடற்கரை சாலையில் யோகாவில் உலக சாதனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஐஸ் கட்டி மீது அமர்ந்து சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்தல், ஆணியின் மீது படுத்து யோகாசனம் செய்தல், ரூபி க்யூப் செய்து கொண்டே யோகாசனம் செய்தல், பானையின் மீது படுத்து யோகாசனம் செய்தல், பந்துகள் மீது படுத்து யோகா சனம் என 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.

    நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    மாணவர்களுக்கு நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில் யோகா நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு உலக சாதனை புரிய வேண்டும் என்பதற்காக ஆணிகள் மீதுப்படுத்தும் பந்துகள் பானைகள் மீது யோகா செய்தும் ஐஸ்கட்டிகள் மீது அமர்ந்து யோகா செய்து மாணவ- மாணவிகள் அசத்தினர்கள்.

    மாணவர்கள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்தி நினைவு ஆற்றலை அதிகப்படுத்த இத்தகைய யோகா சனங்கள் உதவும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.
    • யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் யோகா சனங்களை செய்தார்.

    நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-

    யோகா என்பது நமது முன்னோர்கள் நமக்கு அளித்த கொடையாகும். யோகா பயிற்சியின் மூலம் மன தைரியம், மன ஒருமைப்பாடு, மனநலம் ஆகியவை கிடைக்கப்பெறும்.

    இந்த யோகா பயிற்சியை நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். குறிப்பாக வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் சிறப்பான கலையாக யோகா உள்ளது.

    இளைஞர்கள் இந்த யோக கலையை வாழ்வின் அங்கமாக கடைபிடித்து, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் யோக பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யோகா பயிற்சி செய்து உடல் நலம், மனநலம் பெற்று சிறப்பாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10-வது சர்வதேச யோகா தினம், வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார்.

    ஸ்ரீநகர்:

    பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 10-வது சர்வதேச யோகா தினம், வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    காஷ்மீரை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல்-தொழில் நுட்பக்கல்லூரியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடபட்டது
    • இதில் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை,

    மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நு ட்பக்கல்லூரி யில் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது. மவுன்ட்சியோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் ஜெய பரதன் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ஜெயசீலன் மேற்பார்வையின் கீழ் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் சுய முன்னே ற்றத்திற்கான அர்ப்ப ணிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களை ஒன்றி ணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த சர்வதேச யோகாதினம் அமைந்தது. வாழ்க்கையை நேர்மறை யாக மாற்றுவதற்கும் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கும் யோகாவின் ஆற்றலை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்தது. உடற்கல்வி இயக்குனர், செல்வகண்ணன் நன்றி தெரிவித்தார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
    • பேராசிரியர் லிங்கத்துரை யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் ஆய்வுத்துறை பேராசிரியர் லிங்கத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பப்பி வின்சென்ட் வரவேற்று பேசினார். தமிழ் பேராசிரியர் கதிரேசன் அறிமுக உரையாற்றினார். முடிவில் பேராசிரியர் ஸ்ரீஜா நன்றி கூறினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன செய்முறை பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா நடந்தது.
    • புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் சத்யன் தொடங்கி வைத்தார்.

    நிர்வாக இயக்குநர் சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேம்படுத்த யோகா உதவுகிறது. உலகெங்கிலும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து விழாவில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தனி திறமைகளை வெளிப்படுத்தினர். புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    விழாவை பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் தேவராஜூலு நன்றி கூறினார்.

    • நாடார் வித்தியாசாலை பள்ளியில் யோகா தின கொண்டாட்டப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவரது குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பிராணிக் ஹீலிங் யோகா பயிற்சி அளித்தனர்.

    இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அதிபர் ஜான் பிரகாசம் வாழ்த்திப் பேசினார். கல்லூரி செயலர் அந்தோணிசாமி பேசுகையில் உடல்நலம், மனநலம் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல், உள்ளம், ஆன்மா இவைகளை பாதுகாக்கலாம் என்றார்.

    செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புனிதா, செல்வக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினர். இதில் உடற்கல்வியியல் துறை, தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்தனர்.
    • யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினவிழா நிகழ்ச்சி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்

    தனர். நிகழ்ச்சியை பள்ளியின் மேலாண் இயக்குநர் கிரண்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் எழிலரசி மற்றும் தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்தனர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    • உலகயோகா தினத்தை முன்னிட்டு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ேயாகாசனம் செய்தனர்.
    • வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    நாகப்பட்டினம்

    நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி, யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் கூறியதாவது:-

    யோகா பயிற்சிகளை செய்ய வேண்டியும், அதன் பயன்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமின்றி, மன நலனும் மேம்படுகிறது. மனதை புத்துணர்ச்சி ஆக்குகிறது. எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் என்பது முக்கியமானதாகும். சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், என்னை போன்று உயர் பதவிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • தலைமை ஆசிரியர் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறினார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துரிஞ்சுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னர் சாமி யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, உற்சாகம் கொடுத்தல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்று விளக்கிக் கூறினார்.

    இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பார்வையிட்டார். இதில் உதவி ஆசிரியர்கள் அருள் வைத்தியநாதன் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×