search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.நா., யோகா தினத்தில் பங்கேற்பவர்களுக்காக திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள்
    X

    கோப்புபடம்

    ஐ.நா., யோகா தினத்தில் பங்கேற்பவர்களுக்காக திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள்

    • நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார்.

    திருப்பூர்:

    அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் அணிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'டீ-ஷர்ட்' வழங்கப்படுகிறது.திருப்பூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தின டீ-ஷர்ட்டுகளை தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது.

    அவ்வகையில் நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் யோகா தின விழாவில் பங்கேற்போர், திருப்பூரில் தயாரான டீ-ஷர்ட்டுகளை அணிகின்றனர்.

    இது குறித்து ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

    அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நியூயார்க் கிளை 2016 முதல் சர்வதேச யோகா கொண்டாட்டத்துக்கான டீ-ஷர்ட் தயாரிப்பு ஆர்டர்களை எங்களுக்கு வழங்கி வருகிறது.கடந்தாண்டு 1,800 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பினோம். இந்த ஆண்டு 4,150 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பி உள்ளோம். இந்த டீ-ஷர்ட்களில், எஸ்.பி.ஐ., லோகோ மற்றும் யோகா தின லோகோ பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×