search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Day Of Yoga"

    • புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
    • ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.

    இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.

    • யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் மோடி தெரிவித்தார்.
    • விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    அவர்களோடு அமர்ந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் தெரிவித்தார்.

    'யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது. பதிப்புரிமை,காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர். யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி' எனவும் பிரதமர் மோடி பேசினார்.

    • கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும் 75 நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மைசூரு:

    ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.

    ×