என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா முழுவதும் பா.ஜ.க. தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டம்  - வீடியோ
    X

    இந்தியா முழுவதும் பா.ஜ.க. தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டம் - வீடியோ

    • டேராடூனில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகா செய்தார்.
    • பரிதாபாத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து அவர் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகா செய்தார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.

    டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகா செய்தார்.

    அகர்தலாவில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா யோகா செய்தார்.

    லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்யில் பங்கேற்று யோகா செய்த பொதுமக்கள்.

    நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரெயில் பாலமான செனாப் ரெயில் பாலத்தின் அருகில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிவில் நிர்வாக அதிகாரிகள், வடக்கு ரெயில்வே, சிஆர்பிஎஃப், உள்ளூர்வாசிகள் மற்றும் யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் செனாப் பள்ளத்தாக்கின் அமைதியான நிலப்பரப்பில் ஆசனங்களைச் செய்தனர்.

    மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அவர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அவர் கூறுகையில், அனைவரும் யோகா செய்ய வேண்டும். யோகா நம் வாழ்க்கைக்கு முக்கியமானது, மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நான் எப்போதும் அதைச் செய்கிறேன். எனக்கு ஒரு சிறிய முழங்கால் பிரச்சனை உள்ளது. மேலும் சில ஆசனங்களை என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை, ஆனால் நான் யோகா செய்கிறேன் என்று கூறினார்.

    தெலுங்கானாவில் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் ரங்கரெட்டி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அட்டாரி எல்லையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்கேற்று யோகா செய்தனர்.

    டெல்லியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகம் முழுவதும் யோகாவை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆரோக்கியமாக இருக்க யோகா செய்வது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

    ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, ஏராளமான பொதுமக்களுடன் சேர்ந்து, ஜெய்சால்மரில் யோகா செய்தார்.

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

    ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் பிற இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் யோகா செய்தனர்.

    Next Story
    ×