என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆரோக்கியம் காக்கும் அருமருந்து  யோகா - அன்புமணி யோகா தின வாழ்த்து
    X

    ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா - அன்புமணி யோகா தின வாழ்த்து

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
    • வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண்.

    உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்தக் கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவக் கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×