என் மலர்

  நீங்கள் தேடியது "Bharat Montessori school"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
  • மழலையர் பிரிவு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து அணிவகுத்து வந்தனர்.

  தென்காசி:

  இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. துணைமுதல்வர் பாலசுந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். மாணவி நிவேதிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார். ஜெசிந்தா விநாயகர் சதுர்த்தி பற்றிய கதையைக் கூறினார். மழலையர் பிரிவு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து அணிவகுத்து வந்தனர். பால ஷேஷன், திரிஷானா ஹரிணி ஆகியோர் விநாயகர் சுலோகப்பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுபாமா உறுதிமொழி எடுத்தார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வில் பங்கேற்றோரைப் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் உலகப் புகைப்பட தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
  • இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ் சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

  தென்காசி:

  இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் உலகப் புகைப்பட தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

  'கேமரா லென்ஸ் மூலம் அறிவியல்' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, புஷ்பலதா மெட்ரிக், பத்மாதேவி வித்யாலயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ் சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

  வி.ஜி.பி.ஜி.-கிரியேசன்ஸ் மற்றும் நெல்லை ஒளிப்பதிவாளர் புலனக் குழு இணைந்து நடத்திய இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் நெல்லை மேயர் சரவணன் கலந்து கொண்டு சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினார்.

  சிறப்பிடம் பெற்ற மாணவி ஜெஸ்னோ அலெக்ஸை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்கு நர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘அறிவியல் பட்டறை’ என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  • இலஞ்சி பாரத் மாண்டி சோரி, ஆறுமுகநேரி கமலா வதி, அருப்புக்கோட்டை தேவாங்கர் உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  தென்காசி,ஆக.7-

  ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 'அறிவியல் பட்டறை' என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

  இக்கண்காட்சியில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி, ஆறுமுகநேரி கமலா வதி, அருப்புக்கோட்டை தேவாங்கர் உள்ளிட்ட 55 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இதில் கலந்து கொண்ட தென்காசி இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாய்ராம், முகம்மது முஸின் ஆகியோர் வனவிலங்குகள் ரெயில்வே பாதையில் வராமல் தடுக்கும் செயல் திட்டத்தை அமைத்திருந்தனர்.

  யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ரெயில்வே தண்டவாளத்தை நெருங்கும் போது வெடியோசை கேட்பது போன்ற செயல்திட்டத்தால் யானைகள் ரெயில்வே பாதையை விட்டு விலகிச் செல்வது போன்று வடிவமைத்திருந்தனர். இச்செயல் திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு கிடைத்தது.செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் பாரத் மாண்டிசோரி மாணவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற பாரத் மாணவர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவி அஸ்மிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
  • “பூமிக்கு அருகாமையில் நிலா” என்ற தலைப்பில் அனுஷியா உரையாற்றினார்.

  தென்காசி:

  இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தேசிய நிலா தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி அஸ்மிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முத்து ஜனனி, அனுபாமா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். லோகமித்ரா செய்தி வாசித்தார்.

  வளர்பிறை குறித்து வர்ஷினி ஆங்கிலத்தில் உரையாற்றினார். "பூமிக்கு அருகாமையில் நிலா" என்ற தலைப்பில் அனுஷியா உரையாற்றினார். பிஸ்மி உறுதிமொழியெடுத்தார்.

  பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் தேசிய நிலா தின விழாவில் கலந்து கொண்டவர்களை பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.
  • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

  தென்காசி:

  இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.

  மாணவி ப்ரிஷா தமிழ் - 98, ஆங்கிலம் - 94, இயற்பியல் -100, வேதியியல் -85, உயிரியல் - 96, கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

  மாணவி நிவேதிகா தமிழ் - 95, ஆங்கிலம் - 90, இயற்பியல் - 90, வேதியியல் - 84, உயிரியல் - 99, கணிதம் -100 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

  மாணவர் சக்தீஸ்வரன் தமிழ் - 87, ஆங்கிலம் -71, பொருளியல் -96, வணிகவியல் -97, கணக்குப்பதிவியல் -100, வணிகக் கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

  பாரத் மாணவ- மாணவிகள் தமிழில் -98, சமஸ்கிருதம் -98, ஆங்கிலம் -95, கணிதம் -100, இயற்பியல் -100, கணக்குப்பதிவியல் -100, உயிரியல் -99, வணிகவியல் -97, பொருளியல் -96, வணிகக் கணிதம் -95, ஆங்கிலத் தகவல் தொடர்பு -94, கணிப்பொறி அறிவியல் -89, வேதியியல் -87, கணிணிப் பயன்பாட்டில் -86 மதிப்பெண்களும் அதிகமாக பெற்றனர்.

  வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

  ×