search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thasara"

    • திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக பாளையில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    12 அம்மன் கோவில்கள்

    இந்த ஆண்டு திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது.

    ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், யாதவர், விஸ்வகர்மா, கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    சப்பர பவனி

    விஜயதசமியையொட்டி 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது. 12 அம்மன் சப்பரங்களும் பல்வேறு தெருக்களில் வலம் வந்து பெருமாள், சிவன் உள்ளிட்ட 8 ரத வீதிகளிலும் காட்சி கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 12 அம்மன் சப்பரங்களும் பாளை ராமசாமி கோவில் திடலுக்கு வந்தது. பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு ராஜகோபால சுவாமி கோவில் திடலை அடைந்தது. தொடர்ந்து சிவன் கோவில் பகுதியில் சென்று மாலையில் மார்க்கெட் எருமை கிடா மைதானத்தில் 12 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன.

    சூரசம்ஹாரம்

    இன்று அதிகாலை வரை ஒவ்வொரு சப்பரங்களாக அணிவகுக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து 3 மணிக்கு மாரியம்மன் கோவிலின் எதிரில் 12 சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை சூரசம்ஹாரம் செய்தார். இதனை ஏராள மான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    சூரசம்ஹாரத்தை யொட்டி பாளை பகுதியில் மின் ஊழியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக் கையாக மின்தடை செய்தனர்.

    நெல்லை சந்திப்பு

    நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் பழமை வாய்ந்த அம்மன் கோவில்களான கண்ணம்மன் கோவில், புது அம்மன் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் விமர்சையாக சிறப்பு பூஜைகளுடன் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருள நடைபெற்றது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் அலங்காரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் ஸ்ரீ கண்ணம்மன், புது அம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தாமிரபரணி நதிக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. 3 சப்பரங்களும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி தந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தச்சநல்லூர்

    இதற்கிடையே தச்ச நல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் முன்பு இன்று 7 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று இரவு அங்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். ஊர் பெயரை கொண்டு தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, கரகம் காவடி, கோலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு கிராம தய கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டத்தின்போது மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
    • தேர் கட்டுமானம் காய்ந்த மரக்கட்டைகளால் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை ஊர்வலத்தின்போது தேரோட்டம், சப்பர பவனியை பாதுகாப்பான முறையில் நடத்திட பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    தேரோட்டத்தின்போது வீதிகளில் மின்சாரத்தினை நிறுத்திடவும் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பிகளை அகற்றி பாதுகாப்பான தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும் முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும். தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் ஜெனரேட்டர் மெயின் போர்டில் தகுந்த மின்கசிவு தடுப்புகருவி பொருத்தி சீரியல் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.

    தேர் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன கட்டுமானத்திற்கு பதிலாக காய்ந்த மரக்கட்டைகளால் கட்டுமானம் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீல அகலத்திற்கு தகுந்தாற்போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
    • நெல்லை, தென்காசி உட்பட ஏராளமான மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து கோவிலுக்கு வருவார்கள்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தா ரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கட்டுப்பாடுகள் விலகிக் கொள்ளப்பட்டு கடந்த 26-ம் தேதி பக்தர்கள் பங்கேற்கும் விதமாக தசரா திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்டுதோறும் தசரா திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி உட்பட ஏராளமான மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து கோவிலுக்கு வருவார்கள்.

    அவர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக விநாயகர், முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி, காளி, சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வ வேடங்களிலும், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு ஊர் ஊராக சென்று பொது மக்களிடம் காணிக்கை பெற்று பின்னர் தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின் போது குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான இடங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தொடங்கியுள்ளனர்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் நேற்று ஒரு குழுவினர் விரதத்தை தொடங்கி மாலை அணிந்துள்ளனர். அவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து இன்று முதல் ஒரு ஊராக சென்று காணிக்கை பெற தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், 2 ஆண்டுகளாக எங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு தசரா விழாவின் போது கோவிலுக்கு செல்ல முடியவில்லை.இந்த ஆண்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றார்.

    • பாரத் மாண்டிசோரி பள்ளியில் 3-ம் நாள் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • சமூக சேவை பற்றி லயா ரேச்சல் அன்னை தெரசா போல் வேடமணிந்து அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 3-ம் நாள் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி முத்து ஜனனி இறைவணக்கப் பாடல் பாடினார். அனுபாமா வரவேற்றார். ஸ்ரீஜித் நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அர்ப்பணிப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பெற்றோர்களுக்கு கீழ்ப்படிதல் பற்றி விஷ்ணுவும், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிதல் பற்றி காயத்ரியும், செயல் விளக்கமளித்தனர். சமூக சேவை பற்றி லயா ரேச்சல் அன்னை தெரசா போல் வேடமணிந்து அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தினார். பிரணவ் சிவவேடமும் குங்கும காயத்ரி சக்தி வேடமும் அணிந்து வந்தனர். ஜெயதர்சன் நன்றி கூறினார்.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷாரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    • பக்தர்கள் வேடம் அணியும் பொருட்கள் தேர்வு செய்து வாங்குவதில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • தசரா விழாவின் 1-ம் திருநாளான நேற்று இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் பவனி வந்த காட்சி.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 2-ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசைகலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

    விரதம் இருந்து வந்த பக்தர்கள் காலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர்.

    மேலும் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி பஜார் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்து வேடம் அணியும் பொருட்கள் தேர்வு செய்து வாங்குவதில், தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தசரா விழாவை முன்னிட்டு பக்தர்களால் உடன்குடி பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. மேலும் முறையான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் இல்லாததால், ஒரு வழிப்பாதை அடிக்கடி மீறப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    • கிராமங்கள் தோறும் கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள்.
    • தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கிராமங்கள் தோறும் தசரா குடில் என்ற தசரா பிறை அமைத்து, கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள். ஊர் பெயரில் தசரா குழு அமைத்து வேடமணியும் பக்தர்கள் தங்களது ஊர்குடிசையில் தினசரி இரவு ஒன்றாக கூடி அன்னை முத்தாரம்மனை பற்றி பாடல்கள் பாடி சிறப்புவழிபாடு நடத்துவார்கள். இரவு வீட்டுக்குச் செல்லாமல் தசரா குடிசையில் தங்கி விடுவார்கள்.

    7-ம் திருநாள் அல்லது 8-ம் திருநாள் அன்று விதவிதமான வேடங்கள் அணிந்து, நையாண்டி மேளம், கரகம், குறவன் குறத்தி காவடி, தாரை, தப்பட்டை உட்பட பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திஅம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 10-ம் திருநாளான அக்டோபர் 5-ந் தேதி இரவு தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். அதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    ×